கிளாம்பாக்கம்  
தமிழ்நாடு

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் எப்போது திறப்பு? புதிய தகவல்

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

DIN

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்வே நடைமேடை அமைக்கும் பணிகள் 80% நிறைவு பெற்றது என்றும் ரயில் நிலையத்திற்கான முகப்பு கட்டமைப்பு, பயணிகள் நிழற்குடை, கழிவறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து தாம்பரம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிதாக பேருந்து முனையம் கட்டப்பட்டது.

டாஸ்மாக் துணை மேலாளர் அமலாக்கத் துறை முன் ஆஜர்

புதிய பேருந்து முனையத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையொட்டி செல்லும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிதாக ஒரு ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து வண்டலூா்-ஊரப்பாக்கம் ரயில் நிலையம் இடையே 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகளுடன் கூடிய ரயில் நிலையம் கடந்த ஒரு ஆண்டாக கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

எந்தன் நெஞ்சில் நீங்காத... பாவனா!

உன்னோடு நானும்... ஜெனிலியா!

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

SCROLL FOR NEXT