கோவை: மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் திருப்பூர் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில், திருப்பூர் குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், குழாயிலிருந்து பல அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் அப்பகுதியே பதற்றமடைந்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூருக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் அன்னூர் ரோட்டில் உள்ள நடூர் என்ற பகுதியில் இந்த குடிநீர் குழாயில் அதிக அழுத்தம் காரணமாக திடீரென்று உடைப்பு ஏற்பட்டு பல அடி உயரத்திற்கு தண்ணீர் மேலே பீய்ச்சிஅடித்து வீணாகி வருகிறது.
இது குறித்து குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் அதிக அளவு வெளியேறி வருவதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.