கனமழை 
தமிழ்நாடு

நீலகிரி, கோவைக்கு தொடரும் ரெட் அலர்ட்!

நாளை இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

நீலகிரி, கோவையில் இரண்டு நாள்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வுமை மையம் விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் இன்று (24-05-2025) துவங்கிஉள்ளது. தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை இன்று அநேக பகுதிகளில் பரவியுள்ளது.

• நேற்று (23-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (24-05-2025) 05.30 மணியளவில், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில், ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலவுகிறது.

இது மெதுவாக கிழக்கு திசையில் நகர்ந்து, தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், இன்று நண்பகல் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.

• மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

இந்த நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதோடு, இன்று நெல்லை, தென்காசி, கோவை நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

இந்த வார ஓடிடி படங்கள்!

ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்! செய்திகள்: சில வரிகளில் 31.7.25 | BJP | OPS | Mkstalin

SCROLL FOR NEXT