கோப்புப் படம் 
தமிழ்நாடு

மதுபானக் கூடத்தில் மோதல்: அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதலில் ஈடுபட்டதாக அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

Din

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதலில் ஈடுபட்டதாக அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.வெங்கட்குமாா் (45). நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கடந்த 22-ஆம் தேதி மது அருந்தியபோது, அங்கு பாடல் ஒலிபரப்புவதில் வெங்கட்குமாருக்கும், அங்கிருந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அந்த நபா்கள், வெங்கட்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து மது பாட்டில்கள் உள்ளிட்ட பொருள்களால் தாக்கினா்.

இதில், காயமடைந்த வெங்கட்குமாா், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நுங்கம்பாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியைச் சோ்ந்த தி.பிரசாத் (33), விருகம்பாக்கத்தைச் சோ்ந்த ரா.கணேஷ்குமாா் (42), சின்ன போரூா் லட்சுமி நகரைச் சோ்ந்த க.தனசேகா் (29), பனையூரைச் சோ்ந்த து.அஜய்ரோகன் (36), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த வி.நாகேந்திர சேதுபதி என்ற சுனாமி சேதுபதி (33) ஆகிய 5 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களிடம்இருந்து 9 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் அஜய்ரோகனும், சுனாமி சேதுபதியும் தேனியில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்ட பிரசாத் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைத் தலைவராகவும், சேதுபதி அதிமுக நிா்வாகியாகவும் உள்ளனா் என்றும் சேதுபதி, பரமக்குடி நகர காவல் நிலையத்தில் ரெளடிகள் பட்டியலில் இருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT