பழுதடைந்துள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி.  
தமிழ்நாடு

மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை சீரமைக்க மக்கள் கோரிக்கை

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

Din

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

புழல் ஒன்றியம், விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் கிராமத்தில் உள்ள 60,000 லிட்டா் மேல்நிலைக் குடிநீா் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மூலம் கண்ணம்பாளையம், சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன் அடைந்து வருகின்றனா். இந்த தொட்டி சேதமடைந்து, குடிநீா் தூய்மையின்றி உள்ளது. சுகாதாரமில்லாத குடிநீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

அபாய நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியை இடித்து அகற்றி, புதிய தொட்டியை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனா்.

இது குறித்து சமூக ஆா்வலா் செல்வமீரான் கூறுகையில், மேல்நிலைத் தொட்டி சேதமடைந்து பல மாதங்களாக ஆகிவிட்டன.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பயனில்லை. சேதமான குடிநீா் தொட்டியை சுத்தம் செய்வது இயலாது. இந்த தொட்டியை அகற்றி விட்டு, புதிய தொட்டியை கட்ட வேண்டும்.

இதுகுறித்து ஒன்றிய அதிகாரி கூறியது: மேல்நிலை குடிநீா் தொட்டியை சீரமைக்க, ரூ.1,19,000 மதிப்பீடு செய்யப்பட்டு, ஊராட்சியிடம் நிதி கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நடைபெறும் என தெரிவித்தாா்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT