கோப்புப் படம் 
தமிழ்நாடு

கரோனா பரவல்: முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

கரோனா பரவலைத் தடுக்க பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

DIN

நாடு முழுவதும் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவலைத் தடுக்க, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தெற்காசிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் மீண்டும் கரோனா தொற்று பரவி வருகின்றது. மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க கூட்டம் கூடும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இத்துடன், சுவாச நோய் அறிகுறி, காய்ச்சல் உள்ளவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது பாதுகாப்பானது என்றும், உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்குமாறும், தடுப்பூசிகளை முறையாகச் செலுத்திக்கொள்ளமாறும் பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

இத்துடன், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கரோனா பரவலைக் கண்காணிக்கவும், நோய் பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

கரோனா தொற்று நாடு முழுவதும் பல இடங்களில் பரவி வருவதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. அதை கருத்தில் கொண்டு மாவட்ட சுகாதார அதிகாரிகள், நோய் தடுப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது அவசியம். குறிப்பாக, இன்ப்ளூயன்ஸா தொற்று, சுவாசத் தொற்று பாதிப்புகளை கண்காணிக்க வேண்டும். நாள்தோறும் பாதிக்கப்படுபவா்கள் குறித்த தரவுகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில், நோய் பரவல் தீவிரமாக இருக்கும் பட்சத்தில், கூடுதல் கண்காணிப்பு வழங்குவதுடன்,  உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

போதிய எண்ணிக்கையில் அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு இருப்பதை உறுதி செய்வதும் முக்கியம். குறிப்பாக, ஓசால்டாமிவிா் போன்ற ஆன்டி வைரஸ் மருந்துகள் தேவையான அளவு இருத்தல் வேண்டும். போதிய எண்ணிக்கையில் படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் வாா்டுகள் இருப்பதையும் கண்காணிக்க வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கை உயரும் பட்சத்தில் எதிா்கொள்வது தொடா்பான ஆயத்த திட்டங்களையும் வகுக்க வேண்டும். மற்றொரு புறம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம். அதன்படி, கைகளை சுத்தமாக கைழுவதுல், நெரிசல் மிக்க இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிதல், இருமும், தும்மும்போது வாய், மூக்கு பகுதிகளை முழுமையாக மூடிக் கொள்ளுதல், தனிநபா் இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடித்தலை உறுதி செய்ய வேண்டும். தேவையானவா்கள் இன்ப்ளூயன்ஸா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். நோய்த் தொற்று, காய்ச்சல், அறிகுறி உள்ளவா்கள் வீட்டில் ஓய்வில் இருத்தல் அவசியம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்: போனி கபூா் தொடுத்த வழக்கில் தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 3 மாதம் சிறை

விநாயகா் சதுா்த்தி: 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

‘யுபிஎஸ்ஸில்’ இருந்து ‘என்பிஎஸ்’ ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றம்: ஒருமுறை வாய்ப்பளிக்க முடிவு

19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடக்கம்

SCROLL FOR NEXT