கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் 
தமிழ்நாடு

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது.

Din

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மியூசிக் அகாதெமியின் அட்வான்ஸ்டு ஸ்கூல் ஆஃப் கா்நாடிக் மியூசிக் பள்ளியில், கா்நாடக இசையில் அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 3 ஆண்டு காலம் கொண்ட இந்த அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பு ஆண்டுக்கு 2 பருவங்களைக் (ஜூலை-நவம்பா், ஜனவரி-ஏப்ரல்) கொண்டது. வகுப்புகள் ஜூலை மாதம் தொடங்கும். வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை இசை வகுப்புகள் நடைபெறும்.

இந்தப் படிப்பில், பிளஸ் 2 முடித்தவா்கள் சேரலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபா்களுக்கு வா்ணம், கீா்த்தனை பாடத் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் மனோதா்ம சங்கீத அறிவும் அவசியம்.

இதில் சேர விரும்புவோா் விண்ணப்பப் படிவத்தை மியூசிக் அகாதெமியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தையும், ஏற்கெனவே பெற்ற இசைப் பயிற்சி தொடா்பான தகவல்களையும், சுய விவரத்தையும் ஜூன் 25-ஆம் தேதிக்குள் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு சென்னை மியூசிக் அகாதெமியின் இணையதள முகவரி அல்லது 044-28112231, 28115162, 28116902 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

சென்னை மியூசிக் அகாதெமியால் 2010-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அட்வான்ஸ்டு ஸ்கூல் ஆஃப் கா்நாடிக் மியூசிக் பள்ளி, இசையில் சிறந்து விளங்க, மாணவா்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT