கரையான், புற்றை அரிப்பதுபோல எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அரித்துக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமரிசித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் சேகர்பாபு,
"எடப்பாடியின் அதி தீவிரமான அற்புதமான ராஜதந்திர நடவடிக்கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக கரையான், புற்றை அரிப்பதுபோல இன்றைக்கு அதிமுகவை அவரே அரித்துக்கொண்டிருக்கிறார். பாஜகவை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அதை உண்மையான அதிமுகவினர் உணர்ந்திருக்கிறார்கள். திமுகவை மேலும் பலப்படுத்துவதற்கு அனைவரும் வருவார்கள்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "திமுக அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு திருப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயில் ஆவணங்களை கணினிமயமாக்கியிருக்கிறோம். கோயில்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி 80% நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இன்று வரை 3,740 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர், வெள்ளித்தேர் மற்றும் மரத் தேர்களை ஓடவைத்த பெருமை திமுக அரசுக்கு உண்டு.
வட இந்தியர்களை நாங்கள் வேற்றுக்கண்ணோடு பார்க்கவில்லை
கரூர் சம்பவம் குறித்த அஜித்தின் பேட்டியை நான் பார்க்கவில்லை" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.