பல ஆண்டு காலம் இல்லாத, வரலாறு காணாத வெய்யில் பதிவாகி வருகிறது. இன்று மழையைப் பற்றி பேசவில்லை. ஆனால், மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றினால் உயரும் வெப்ப அளவைப் பற்றி பார்க்க வேண்டும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத் தொடக்கத்தில், மோந்தா புயல், ஆந்திரம் அருகே கரையைக் கடந்த அடுத்த நாளே சூரியன் தன் வேலையைச் செய்ய வேகமாக வந்துவிட்டது. புதன்கிழமை முதல் பெய்த மழையின் சுவடே தெரியாமல் மாற்றி வருகிறது கடுமையான வெய்யில்.
இதுவரை நவம்பர் மாதத்தில் அதிகபட்ச வெய்யில் பதிவான விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அதிகபட்ச வெய்யில்
35.5 - 01.11.2025 (இதுவரை இல்லாத உச்சபட் அளவு)
35.4 - 02.11.1999
35.1 - 09.11.2019
34.7 - 05.11.2016
34.6 - 03.11.1999
மீனம்பாக்கத்தில் பதிவான அதிகபட்ச அளவு
35.6 - 02.11.1999
35.4 - 01.11.2025 (நவம்பரில் 2வது அதிகபட்ச வெய்யில்)
34.8 - 05.11.2016
34.7 - 09.11.2019
34.6 - 01.11.1999
வேலூரில் பதிவான வெய்யில் அளவு
35.8 - 13.11.1970
35.6 - 01.11.2025 (2வது அதிகபட்ச வெய்யில் நாள்)
35.3 - 07.11.2016
35.2 - 06.11.2016
35.0 - 02.11.1999
மதுரையில் பதிவான வெய்யில் அளவு
38.0 - 14.11.1997
36.5 - 02.11.1995
36.4 - 01.11.2025 (3வது அதிகபட்ச வெய்யில் நாள்)
36.0 - 01.11.1994
35.8 - 03.11.1995
எப்போது தமிழகத்துக்கு மழை திரும்பும்?
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் உள்பட பரவலாக நல்ல செய்தி உள்ளது. கடுமையான வெய்யிலுக்கு இடையே ஆங்காங்கு சிவப்புத் தக்காளிகள் தென்படுகின்றன. வெப்ப சுழற்சியால் ஏற்பட்டுள்ளன. நவம்பர் மாதத்தில் பகலில் வெப்பமாக இருந்தாலும் மாலை அல்லது இரவில் அதாவது நவம்பர் 3ஆம் தேதி முதல் 6 வரை மழை பெய்யும். பிறகு ஒரு சில நாள்கள் மழைக்கு இடைவேளை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.