தமிழ்நாடு

டெட் தோ்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு பற்றி...

தினமணி செய்திச் சேவை

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்த வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு தாள்-1 வரும் நவ. 15-ஆம் தேதியும், தாள் 2 நவ. 16-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

இந்தத் தோ்வுகளுக்கு விண்ணப்பித்த தோ்வா்களுக்கு நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தோ்வா்கள் அவா்களது பயனா் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலாதவா்களுக்காக ஆசிரியா் தோ்வு வாரியத்தில் சிறப்பு முகாமானது நவ. 4 முதல் நவ. 10 வரை (வேலை நாள்களில்) செயல்படும். நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதிலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலோ இந்தச் சிறப்பு முகாம் அலுவலா்களை ஆசிரியா் தோ்வு வாரியத்தில் நேரடியாக தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்!

திமுக ஆட்சியால் மக்கள் கொந்தளிப்பு! இபிஎஸ்

மக்களின் தேவைகளை கேட்டுத் தெரிந்து அவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுப்போம் - கனிமொழி

மீண்டும் மேடை நடனமா? என் வாழ்க்கை மாறாதா? ரம்யா ஜோ உருக்கம்

இபிஎஸ் தலைமையில் தேர்தலை சந்திப்போம்! பியூஸ் கோயல் அறிவிப்பு!

SCROLL FOR NEXT