பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்... X
தமிழ்நாடு

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்...

இணையதளச் செய்திப் பிரிவு

சேலம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை நடுவழியில் நிறுத்தி சிலர் தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும் பாமக நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளருமான அருள் இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரில் தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருக்கும்போது ஒரு கும்பல் நடுவழியில் காரை நிறுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

காரை கடுமையாகத் தாக்கிய நிலையில் அருளின் ஆதரவாளர்கள் அதனைத் தடுக்கச் சென்றபோது அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அருள், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க உள்ளார். அன்புமணியின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தன் மீதான கொலை முயற்சி இது என அன்புமணி தரப்பினர் மீது அருள் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அன்புமணி ஆதரவாளரான சேலம் மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ், தாக்குதல் நடத்திய கும்பலில் இருந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. ராமதாஸின் தீவிர ஆதரவாளரான அருள், அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதேபோல அன்புமணி, அருள் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் எம்எல்ஏ அருள் மீதான தாக்குதல் அந்த கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PMK MLA Arul's car was blocked and attacked

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT