கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து தமிழக பகுதிகள் வழியாக பிகாா் மாநிலம் பரோனி நிலையத்துக்கு புதன்கிழமை (நவ.5) மாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு:
கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து புதன்கிழமை (நவ.5) மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06159) சனிக்கிழமை (நவ.8) காலை 6 மணிக்கு பரோனி நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், பாடனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.