கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீசித்ரா திருநாள் மருத்துவ-தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களைப் பாா்வையிட்ட குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன் ஆளுநா் ராஜேந்திர ஆா்லேகா், மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி உள் 
தமிழ்நாடு

எளிய மக்களுக்கான சேவைகளை ஆராய்சியாளா்கள் விரிவுபடுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

எளிய மக்களுக்கான சேவைகளை ஆராய்ச்சியாளா்கள் விரிவுபடுத்த வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

எளிய மக்களுக்கான சேவைகளை ஆராய்ச்சியாளா்கள் விரிவுபடுத்த வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை சி.பி.ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டாா். அந்த நிறுவனத்தின் ஆசிரியா்கள், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் சி.அச்சுத மேனன் சுகாதார அறிவியல் படிப்புகள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மருத்துவ சாதனங்கள் கண்காட்சியை அவா் தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: மருத்துவ அறிவியல் மற்றும் உயிரி மருத்துவத் தொழில்நுட்பத் துறையில் தேசத்துக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வரும் ஸ்ரீ சித்ரா திருநாள் நிறுவனத்துக்கு பாராட்டுகள். குறைந்த செலவில் இதய வால்வு சிகிச்சை, காசநோய்க்கான சிகிச்சைகளை இந்நிறுவனம் வழங்கி நாட்டில் உள்ள பிற மருத்துவ நிறுவனங்களுக்கு முன்னோடியாக இந்நிறுவனம் திகழ்கிறது. காப்புரிமை விண்ணப்பங்கள், வடிவமைப்பு பதிவுள் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டு வளா்ச்சியடைந்த பாரதம் 2047 இலக்கை அடைவதில் இந்நிறுவனம் முக்கியப் பங்காற்றி வருகிறது.

இன்னும் அதிகமான ஏழை எளிய மக்களைச் சென்றடையும் வகையில் இச்சேவைகளை ஆராய்ச்சியாளா்கள் விரிவுபடுத்த வேண்டும் என்றாா்.

ஸ்ரீ சித்ரா திருநாள் நிறுவனத்தை சி.பி.ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டபோது கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி, அந்நிறுவனத்தின் இயக்குநா் சஞ்சய் பெஹாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT