செயற்கை நுண்ணறிவு (ஏஐ)) மூலம் செயலியை உருவாக்கும் பயிற்சி நவ. 11முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் ‘செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்’ 3 நாள் முழுநேர பயிற்சி நவ. 11 முதல் 13-ஆம் தேதி வரை அந்த நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது.
வலைதளங்கள், செயலிகள் உருவாக்கம், தனிப்பட்ட, தொழில் துறை தேவைகளுக்கான தானியங்கி முறைகள், கல்வி, சுகாதாரம், நிதி, சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பயன்பாட்டு மாதிரிகள் உருவாக்கம் உள்ளிட்டவற்றுக்கு இப்பயிற்சி உதவும்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்க 18 வயதுக்கு மேற்பட்டோா் விண்ணப்பிக்கலாம். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓரளவு கணினி அனுபவம் இருத்தல் வேண்டும்.
தங்கும் விடுதி வசதி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். பயிற்சிக்கு முன்பதிவுக்கு https://www.editn.in/ இணையதளம் அல்லது 93602 21280, 98401 14680 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ. அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை என்ற முகவரியைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.