இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  
தமிழ்நாடு

அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் திறப்பு - அமைச்சர் பி.கே.சேகர்பாபு

தினமணி செய்திச் சேவை

அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

ரூ. 14 கோடியில் கட்டப்பட்டு வரும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தின் இறுதி கட்டப் பணிகள், அம்பத்தூர் பானு நகரில் ரூ. 6.83 கோடியில் மேம்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தில் முன்னேற்றப் பணிகள் குறித்தும் மற்றும் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா பணியின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, இன்று சர்வதேச தரத்தில் அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து குத்தம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் முழுமையாக முன்னேற்றம் அடைந்து சிறப்பாக உருவெடுத்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்தை 2026}ஆம் ஆண்டு தை மாதத்துக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திருவிக நகரில் ஒரு பேருந்து நிலையமும், பெரியார் நகரில் மற்றொரு பேருந்து நிலையமும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மாமல்லபுரம், செங்கல்பட்டு, ஆலந்தூர் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல ஆவடியில் சுமார் ரூ. 32 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு சென்னை மாநகரத்தில் மட்டும் 11 பேருந்து நிலையங்கள் சுமார் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை கருத்தில் கொண்டு 11 கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, கழிப்பறை வசதிகள், உணவருந்தும் கூடம், போக்குவரத்து தொழிலாளர் ஓய்வு அறைகள் ஆகிய அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளுக்கு 140 பேருந்துகள், சுமார் 1,400}க்கும் மேற்பட்ட முறை இந்த பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல உள்ளன. இந்த மாத இறுதிக்குள் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க உள்ளோம் என்றார்.நிகழ்வில் சென்னை மேயர் ஆர்.பிரியா, அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் மழை: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT