ஆம்பூர் அருகே சபரிமலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி இருவர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் - மின்னூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் கடந்த 13 ஆம் தேதி சபரிமலை சென்று மீண்டும் இன்று காலை, திருத்தணி திரும்பி கொண்டிருந்தபோது, மின்னூர் பகுதியில் சாலையோரம் நிறுத்திவிட்டு தேநீர் குடிப்பதற்காக சாலையைக் கடந்தபோது சரக்கு வாகனம் மோதியதில் திருத்தணி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கங்காதரன், சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் ஹரி, நரசிம்மன் ஆகியோர் படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர் அருகே தேநீர் குடிப்பதற்காக சாலையை கடக்க முயன்ற போது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி ஐயப்ப பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மின்னூர் செங்கிலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் ரோந்து பணி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டும் அந்த பகுதியில் சிக்னல் அமைத்து விபத்தைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: பிகார் காற்று தமிழகத்திலும் வீசுகிறது! - பிரதமர் மோடி பேச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.