நவ.27ல் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
வங்கக்கடலில் நவ.27ல் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாவது பற்றி..
வங்கக்கடலில் நவம்பர் 27ல் மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நவ.27ல் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து ஆந்திரத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், வருகிற நவ. 22-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ. 24-இல் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாளை முதல் 6 நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
summary