கோப்பிலிருந்து 
தமிழ்நாடு

கடலூர், சாத்தமங்கலம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் மூவர் பலி

கடலூர், சாத்தமங்கலம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் மூவர் பலியாகினர்.

இணையதளச் செய்திப் பிரிவு

கடலூர் மாவட்டம் சாத்தமங்கலம் அருகே கனமழை பெய்த நிலையில், திடீரென மின் கம்பி அறுந்து விழுந்ததில், தம்பதி உள்பட மூவர் பலியாகினர்.

ஒரத்தூர் காவல்நிலைய சரகத்துக்கு உள்பட்ட சாத்தமங்கலம் அருகே இன்று காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், சாலையோரம் நின்றிருந்த மரம் ஒன்று மின் கம்பி மீது விழுந்தது.

மரம் விழுந்ததால், மின் கம்பி அறுந்து கீழே விழுந்ததில், அங்கே நின்று கொண்டிருந்த சூசை (70), அவரது மனைவி பிலோன் மேரி (60), வனதாஸ் மேரி (70) ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை மீட்டு உடல் கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீரென கால், முகத்தில் வீக்கமா?சிறுநீரகக் கோளாறாக இருக்கலாம்! மருத்துவர் ஆலோசனைகள்!

என்னுடைய ஞாயிறு இப்படித்தான்... ஃபரினா ஆசாத்!

ஆபத்தான நாய்களுடன் சில மனிதர்கள்... எகோ - திரை விமர்சனம்!

தந்தைக்கு மாரடைப்பு: ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 26 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT