சென்னை: பலத்த மழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும்
கனமழை எதிரொலியாக, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், விருதுநகர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆத்தூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும், நாளை மறுநாள் சென்யார் புயல் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் அறிவித்திருந்தார்.
மதுரை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கே ஜே பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் இன்று மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல்.
நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவு.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா அறிவிப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.