தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவசத்திரம், கீழ தோட்டம் ஏரிப்புறக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் ( 24.11.2025 ) இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறை மற்றும் கடலோர காவல் படை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு முன்பாக தூரக்கடல் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் உடனே கரைதிரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் கரையேற்றி வைக்கவும், மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளவும் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படை சார்பில் மீனவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அடுத்த 3 நாள்களுக்கு டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நவ.24-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தஞ்சை மாவட்ட மீனவர்கள் உரிய பாதுகாப்புடன் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Thanjavur fishermen have been banned from going to sea due to strong sea winds.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.