தொடர் மழை காரணமாக ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ. 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கையில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, குறிப்பாக தென் மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர், கோவை, கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நண்பகல் வரை மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால், ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.