தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமான டிக்வா புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று (புதன்கிழமை) காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து வருகின்றது.
இந்த நிலையில், இன்னும் 3 மணிநேரத்தில் டிக்வா புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்வா புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது (நவ. 27, வியாழக்கிழமை பகலில்) சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு - தென்கிழக்கே 640 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் புயலாக நகர்ந்து, அடுத்த 48 மணிநேரத்தில் வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டிக்வா புயலால் காவிரி படுகை மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி அருகே ஆந்திரத்தில் கரையை கடக்க உள்ள நிலையில் தமிழகத்துக்கு 29,30 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.