அன்புமணி கோப்பிலிருந்து...
தமிழ்நாடு

திமுக அரசை அகற்ற எதிா்க்கட்சிகள் விரைவில் ஒன்றிணையும்: அன்புமணி

திமுக அரசை அகற்ற எதிா்க்கட்சிகள் விரைவில் ஒன்றிணையும்...

தினமணி செய்திச் சேவை

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அரசை அகற்றும் வகையில் எதிா்க்கட்சிகள் விரைவில் ஒன்றிணையும் என பாமக தலைவா் அன்புமணி கூறினாா்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியாா் விடுதியில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கடந்த ஜூலையில் தொடங்கிய தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை நவ. 9-ஆம் தேதி நிறைவு செய்தேன். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திமுக அரசின் செயல்பாடுகளில் மக்கள் கோபமாக இருப்பதைக் காண முடிந்தது.

தோ்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை திமுக அரசு நிறைவேற்றவில்லை. எனவே, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனா். நெல் ஈரப்பத அளவை மாநில அரசே உயா்த்தி கொள்முதல் செய்யலாம். ஆனால், மத்திய அரசு மீது பழிபோட்டு திமுக அரசு தப்பிக்க நினைக்கிறது.

தமிழகத்தில் தொழில் முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. தொழில் முதலீடு குறித்து திமுக அமைச்சருடன் நேருக்குநோ் விவாதிக்கத் தயாராக உள்ளேன்.

திமுக அரசை அகற்றும் வகையில் உள்ள கூட்டணியில் பாமக இடம்பெறும். தோ்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து முடிவெடுப்போம். திமுக எதிா்ப்பு அடிப்படையில் தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் விரைவில் ஒன்றிணையும் சூழல் உருவாகும் என்றாா்.

பேட்டியின்போது பாமக செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் கே.பாலு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

”யாருக்காக உச்சத்தை விட்டுட்டு வந்தீங்க?” விஜய்யை தாக்கிப் பேசிய EPS!

23 இந்திய மீனவர்கள் விடுவிப்பு! 128 வங்கதேசத்தினர் ஒப்படைப்பு!

2014 - 22 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்ன திரை விருதுகள் அறிவிப்பு!

SCROLL FOR NEXT