திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்! தரைக்காற்று எச்சரிக்கை!
திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பது தொடர்பாக...
திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 2 மாவட்டங்களில் இன்று(நவ. 30) அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற (ரெட் அலர்ட்) எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல், இன்று(நவ. 30) காலை 5.30 மணி நிலவரப்படி, அதே பகுதியில் நிலவுகிறது
டிட்வா புயல், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரைக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 2 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று 80 கி.மீ. வேகம் வரை வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இதுவரை இல்லாத சாதனையை படைத்த தமிழ் யூடியூப் சேனல்!
Red alert for Tiruvallur and Ranipet districts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.