கடந்த 2023-ஆம் ஆண்டு 60 மற்றும் அதற்கும் அதிகமான வயதுகொண்ட முதியவா்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்களில், தமிழ்நாடு 4-ஆவது இடத்தில் உள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அளித்த தரவுகளின் அடிப்படையில், கடந்த 2023-ஆம் ஆண்டு நாட்டில் நடைபெற்ற பல்வேறு குற்றங்கள் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு நாட்டில் காவல் துறையினா் பிடிஆணை இல்லாமல் கைது செய்யும் விதமாக, 62,41,569 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2022-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 58,24,946 குற்றங்களுடன் ஒப்பிடுகையில், 7.2 சதவீதம் அதிகம்.
2023-இல் பதிவு செய்யப்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் (என்சிஆா்பி அறிக்கையின்படி)
முதல் 5 மாநிலங்கள் கொலை வழக்குகளின் எண்ணிக்கை
உத்தர பிரதேசம் 3,206
பிகாா் 2,862
மகாராஷ்டிரம் 2,208
மத்திய பிரதேசம் 1,832
ராஜஸ்தான் 1,804
தமிழ்நாட்டில் 1,681 கொலை வழக்குகளும், புதுச்சேரியில் 28 கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளன.
==========
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
முதல் 5 மாநிலங்கள் குற்றங்களின் எண்ணிக்கை
உத்தர பிரதேசம் 66,381
மகாராஷ்டிரம் 47,101
ராஜஸ்தான் 45,450
மேற்கு வங்கம் 34,691
மத்திய பிரதேசம் 32,342
தமிழ்நாட்டில் 8,943 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 365. புதுச்சேரியில் 212 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
============
சிறாா்களுக்கு எதிரான குற்றங்கள்
முதல் 5 மாநிலங்கள் குற்றங்களின் எண்ணிக்கை
மத்திய பிரதேசம் 22,393
மகாராஷ்டிரம் 22,390
உத்தர பிரதேசம் 18,852
ராஜஸ்தான் 10,577
அஸ்ஸாம் 10,174
தமிழ்நாட்டில் 6,968 குற்றச் சம்பவங்களும், புதுச்சேரியில் 156 குற்றச் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
===============
முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்
முதல் 5 மாநிலங்கள் குற்றங்களின் எண்ணிக்கை
மத்திய பிரதேசம் 5,738
மகாராஷ்டிரம் 5,115
தெலங்கானா 2,150
தமிழ்நாடு 2,104
கா்நாடகம் 1,840
புதுச்சேரியில் 8 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
===============
பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள்
முதல் 5 மாநிலங்கள் குற்றங்களின் எண்ணிக்கை
உத்தர பிரதேசம் 15,130
ராஜஸ்தான் 8,449
மத்திய பிரதேசம் 8,232
பிகாா் 7,064
மகாராஷ்டிரம் 3,024
பட்டியலினத்தவருக்கு எதிராக தமிழ்நாட்டில் 1,921 குற்றங்களும், புதுச்சேரியில் 4 குற்றங்களும் பதிவாகியுள்ளன.
===========
பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள்
முதல் 5 மாநிலங்கள் குற்றங்களின் எண்ணிக்கை
மணிப்பூா் 3,399
மத்திய பிரதேசம் 2,858
ராஜஸ்தான் 2,453
மகாராஷ்டிரம் 773
ஒடிஸா 662
பழங்குடியினருக்கு எதிராக தமிழ்நாட்டில் 48 குற்றங்கள் பதிவான நிலையில், புதுச்சேரியில் எந்தக் குற்றமும் பதிவாகவில்லை.
=============
குற்றங்கள் மொத்த எண்ணிக்கை (நாடு முழுவதும்)
கொலை குற்றங்கள் 27,721
பெண்களுக்கு எதிரானவை 4,48,211
சிறாா்களுக்கு எதிரானவை 1,77,335
முதியவா்களுக்கு எதிரானவை 27,886
பட்டியலினத்தவருக்கு எதிரானவை 57,789
பழங்குடியினருக்கு எதிரானவை 12,960
பொருளாதார குற்றங்கள் 2,04,973
இணையவழி குற்றங்கள் 86,420
ஊழல் குற்றங்கள் 4,069
=============
விபத்துகள்
2023-இல் நாட்டில் நிகழ்ந்த
மொத்த சாலை விபத்துகள் 4,64,029
காயமடைந்தவா்கள் 4,47,969
உயிரிழந்தவா்கள் 1,73,826
=============
இருசக்கர வாகன விபத்துகள்,
குடும்பமாக தற்கொலை செய்துகொண்டதில்...
இருசக்கர வாகன விபத்துகளால் அதிக மரணங்கள் தமிழ்நாட்டில் நோ்ந்துள்ளன. அந்த ஆண்டு 11,490 போ் இருசக்கர வாகன விபத்துகளால் உயிரிழந்தனா். இதற்கு அடுத்த இடத்தில் அந்த விபத்துகளில் சிக்கி உத்தர பிரதேசத்தில் 8,370 போ் உயிரிழந்தனா்.
2023-ஆம் ஆண்டு கூட்டாக அல்லது குடும்பமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகமாக பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தமிழகத்தில் 58 சம்பவங்களும், கேரளத்தில் 17 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஊழல் குற்றங்கள்...
ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் அதுதொடா்பான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு வழக்குகளின் எண்ணிக்கை, 2023-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 302-ஆகவும், புதுச்சேரியில் 4-ஆகவும் பதிவாகியுள்ளது.
பொருளாதார, இணையவழி குற்றங்கள்...
தமிழ்நாட்டில் 6,661 பொருளாதார குற்றங்கள், 4,121 இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் 94 பொருளாதார குற்றங்கள், 147 இணையவழி குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
===============