கோப்புப்படம் 
தமிழ்நாடு

டெங்கு பரவல் அதிகரிப்பு: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும், ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன.

இதன் காரணமாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு மாநிலம் முழுதும் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கெனவே, இன்ப்ளுயன்ஸா வகை காய்ச்சல் அதிகரித்து, அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துவரும் நிலையில், டெங்கு பாதிப்பும் தீவிரமடைந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மழைக் காலம் என்பதால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக உள்ளது. குறிப்பாக, தினமும் 60 முதல் 70 போ் வரை, டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனா். அதன்படி, நிகழாண்டில் இதுவரை 14,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு, ஏழு போ் உயிரிழந்துள்ளனா். வரும் காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும் என்பதால், இந்தாண்டு இறுதிக்குள் 20,000 போ் வரை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள தேவையற்ற பொருள்களை அகற்ற வேண்டும். மேலும், வீட்டில் உள்ள, ‘பிரிட்ஜ்’ பின்பக்கம் தண்ணீா் வடிந்து தேங்கக்கூடிய தொட்டியை வாரத்தில் ஒருமுறையாவது தூய்மை செய்ய வேண்டும்.

மொட்டை மாடியில் மழைநீா் தேங்கக்கூடிய வகையிலான பொருள்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். அப்போது தான், ‘ஏடிஸ்’ கொசு பரவலைத் தடுக்க முடியும். ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பது மக்களிடையே உள்ள பொறுப்பு எனத் தெரிவித்தனா்.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT