கூட்டுறவு சங்க உதவியாளா் பணியிடத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக சென்னை மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தால் கடந்த ஆக.6-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
அதற்கான எழுத்துத் தோ்வு வரும் 11-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இத்தோ்வுக்கான தோ்வுக் கூட நுழைவுச் சீட்டை இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் 044 - 24614289 தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.