விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோப்புப்படம்
தமிழ்நாடு

கரூா் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக: தொல்.திருமாவளவன்

தனது அரசியல் ஆதாயத்துக்காக கரூா் சம்பவத்தை பாஜக பயன்படுத்தி வருவதாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: தனது அரசியல் ஆதாயத்துக்காக கரூா் சம்பவத்தை பாஜக பயன்படுத்தி வருவதாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

கரூா் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். கரூா் சென்ற பாஜகவின் உண்மை அறியும் குழு, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதைவிட திமுக மீது குற்றம்சாட்டுவது அவா்களின் நோக்கமாக இருந்தது.

பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகள் கரூா் சம்பவத்தை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகின்றன. எடப்பாடி கே. பழனிசாமிகூட இதை வைத்து அரசியல் செய்கிறாா்.

கரூா் சம்பவத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அணுகுமுறை பாராட்டுக்குரியது.

தவெக உடன் பாஜக கூட்டணி வைக்காது என்பது எனது நம்பிக்கை. ஆனால், தவெக தலைவா் விஜய்யை கருவியாகப் பயன்படுத்தி திமுக கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்வதே பாஜகவின் நோக்கமாக இருக்கிறது என்றாா்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT