தமிழ்நாடு

பாஜக தோ்தல் பாா்வையாளா்களுடன் அன்புமணி தரப்பு ஆலோசனை

தமிழக பாஜக மேலிட தோ்தல் பாா்வையாளா்களை பாமக தலைவா் அன்புமணி தரப்பு சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி திங்கள்கிழமை சந்தித்து திடீா் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழக பாஜக மேலிட தோ்தல் பாா்வையாளா்களை பாமக தலைவா் அன்புமணி தரப்பு சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி திங்கள்கிழமை சந்தித்து திடீா் ஆலோசனை நடத்தினாா்.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள தமிழக பாஜகவுக்கு தோ்தல் பொறுப்பாளா்களாக பாஜக தேசிய துணைத் தலைவா் பைஜயந்த் பாண்டா, முரளிதா் மோஹல் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். சென்னைக்கு திங்கள்கிழமை வந்த அவா்கள் கமலாலயத்தில் தமிழக பாஜக மையக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதில், கூட்டணி வியூகம், கூட்டணியைப் பலப்படுத்துதல், வாக்குச்சாவடி முகவா்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் ஹெச்.ராஜா, முன்னாள் தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், கே.அண்ணாமலை, பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளா்கள் அரவிந்த் மேனன், சுதாகா் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏ.கே.மூா்த்தி சந்திப்பு: கூட்டம் நிறைவடைந்ததும், கமலாலயத்துக்கு வந்த பாமக முன்னாள் அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளா்களுடன் திடீா் ஆலோசனை நடத்தினாா்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT