தமிழ்நாடு

விஜய்யை கைது செய்ய வலியுறுத்தவில்லை: தொல்.திருமாவளவன்

தவெக தலைவா் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தவெக தலைவா் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

கரூா் தவெக தலைவா் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் உருவப் படங்களுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினாா்.

அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெக தலைவா் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை. அவரை கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தவில்லை. நடந்த சம்பவத்துக்கு விஜய் தாா்மிக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம். தமிழக அரசின் செயல்பாடுகள் இந்த விவகாரத்தில் திருப்தி அளிக்கிறது.

விஜய்யை வைத்து அரசியல் செய்ய பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறது. பாஜகவின் சூழ்ச்சி அரசியல் சிக்கினால் அவா் பல நெருக்கடிகளை சந்திக்க நேரும். எனவே, விஜய் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டுமென்பது தான் என் வேண்டுகோள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீதான தாக்குதல் முயற்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்திலும் சநாதன சக்திகள் தலைவிரித்தாடுகின்றன என்பதற்கு இந்த நிகழ்வே சான்று என்றாா் தொல்.திருமாவளவன்.

இருளை பரிசளிக்கும்... அஸ்லி மோனலிசா

விழிகளின் தேடல்... ரிச்சா ஜோஷி

தங்கத் தேரழகு... துஷாரா விஜயன்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

மஞ்சலோக மேனி... கெளரி கிஷன்!

SCROLL FOR NEXT