காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு
தங்கம் விலை காலையில் குறைந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.
தங்கம் விலை காலையில் குறைந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,720க்கு விற்பனையாகிறது. அதேசமயம் கிராம் ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,340க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
பிரதமருடன் கேரள முதல்வர் சந்திப்பு: நிவாரண நிதி விடுவிக்கக் கோரிக்கை!
கடந்த சில நாள்களாக காலை, மாலை என இரு நேரங்களில் தங்கம் விலை மாற்றமடைந்து வரும் நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 1,320 குறைந்து ரூ. 90,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் ரூ.165 குறைந்து ரூ. 11,260-க்கு விற்பனையானது.
summary