EPS
தமிழ்நாடு

சான்றிதழ்களை முறையாக பதிவேற்ற வேண்டும்: குரூப் 1 தோ்வா்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

சான்றிதழ்களை முறையாக பதிவேற்ற வேண்டும்: குரூப் 1 தோ்வா்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

குரூப் 1 தோ்வா்கள் சான்றிதழ்களை சரியான முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குரூப் 1-இல் உள்ள பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு தோ்வா்களால் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதில் சில தோ்வா்கள் உரிய சான்றிதழ்களை சில குறைபாடுகளுடன், சரியாக பதிவேற்றம் செய்யாதது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில் அக். 19-க்குள் விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட தோ்வா்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்தத் தோ்வா்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தோ்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் கிடைக்காவிட்டால் என்ன? அதைவிட பெரியது கிடைத்துவிட்டது: டிரம்ப்

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்! இன்று வழங்கப்படுகின்றன!!

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு!

SCROLL FOR NEXT