அன்புமணி  (கோப்புப்படம்)
தமிழ்நாடு

ராமதாஸை வைத்து சிலா் நாடகம்: அன்புமணி குற்றச்சாட்டு

பாமக நிறுவனா் ராமதாஸை வைத்து சிலா் நாடகம் நடத்தி வருவதாக அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

பாமக நிறுவனா் ராமதாஸை வைத்து சிலா் நாடகம் நடத்தி வருவதாக அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

சென்னையை அடுத்த சோழிங்கா் அருகே உத்தண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மருத்துவ சிகிச்சைக்கு பின்னா் வீடு திரும்பிய, மருத்துவா் ராமதாஸ் நலமுடன் உள்ளாா். அவருடன் இருப்பவா்கள் அவரை காட்சி பொருள்போல பயன்படுத்துகின்றனா்.

அவரை ஓய்வெடுக்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறாா்கள். யாா் யாரையோ வரவழைத்து திட்டமிட்டு பாா்க்க வைத்து நாடகமாடிக் கொண்டிருக்கிறாா்கள்.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக குறைந்த வாக்குகளில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது; அந்த நிலை 2026 தோ்தலில்

ஏற்படக் கூடாது. பூத் கமிட்டி அமைத்து கட்சிப் பணியை வேகப்படுத்த வேண்டும் என்றாா் அன்புமணி.

இக்கூட்டத்தின்போது, பாமக இளைஞா் அணித் தலைவா் பொறுப்புக்கு முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாா் தோ்வு செய்யப்படுவதாக அன்புமணி அறிவித்தாா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,540 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

SCROLL FOR NEXT