தடை செய்யப்பட்டுள்ள கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை தயாரித்த காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ‘ஸ்ரீசன் பார்மகியூட்டிகல் கம்பெனியின்' மருந்து தயாரிப்பதற்கான உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பால், அடுத்தடுத்து பல குழந்தைகள் உயிரிழந்தன.
அந்தக் குழந்தைகள் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டது தெரியவந்தது.
அந்த மருந்தின் மாதிரிகளைப் பரிசோதித்த தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாக துறை, அது கலப்பட மருந்து என்று அறிவித்தது.
இதனையடுத்து, அந்நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தால் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் எதிரொலியாக அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்நிறுவனத்தை மூட தமிழக அரசு திங்கள்கிழமை(அக். 13) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.