இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள அகரபட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல் மனைவி சசிகலா(35). இவர் கடந்த 4 ஆம் தேதி அன்னவாசல் குடிசை மாற்று வாரியம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த புதுக்கோட்டை கோவில்பட்டியைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விக்னேஷ்(25) என்பவர் சசிகலா கழுத்தில் இருந்த செயினை பறித்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து சசிகலா அன்னவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீஸார் குற்றவாளியைப் பிடிப்பதில் தீவிரம் காட்டினர்.
தொடர்ந்து நிகழ்விடத்தை ஆய்வு செய்த போலீஸார், அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விக்னேஷ், செயினைப் பறித்துச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 3 பவுன் தங்கச்செயின், ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
10 நாள்களில் குற்றவாளியைக் கண்டுபிடித்த தனிப்பிரிவு போலீஸாரை மாவட்ட கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா வெகுவாக பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.