தமிழ்நாடு

விக்டோரியா அரங்க பணியை 2 வாரத்தில் முடிக்க உத்தரவு

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள பழமையான விக்டோரியா பொது அரங்கு புணரமைப்புப் பணிகளை 2 வாரங்களில் முடிக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆங்கிலேய ஆட்சியில் கடந்த 1890 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது விக்டோரியா பொது அரங்கம். தொன்மையான இந்த அரங்கை பழமை மாறாமல் புதுப்பித்து புணரமைக்கும் பணி மற்றும் பூங்கா அமைக்கும் பணி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் ரூ.32.62 கோடியில் நடைபெற்றுவருகிறது.

பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதை அடுத்து, நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு விக்டோரியா பொது அரங்கப் பணிகளை வெள்ளிக்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணிகளை 2 வாரத்துக்குள் முடிக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

அத்துடன் புதிய மாநகராட்சி கூட்டரங்கம் கட்டுவதற்காக பழைய கட்டடங்கள் இடிக்கும் பணியையும் அவா் பாா்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளா்ச்சிக்குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதே இளமை, அதே உற்சாகம்... அதே மியா!

சில இரவுகள்... ஒளிக்குச் சொந்தம்... சந்தீபா தர்!

கனவுச் சாயல்... அமைரா தஸ்தூர்!

மழையால் குறைக்கப்பட்ட ஓவர்கள்... தடுமாறிய இந்தியாவை காப்பாற்றிய ராகுல்! ஆஸி.க்கு 137 ரன்கள் இலக்கு!

நடிகைகள் இதற்கு மட்டும்தானா? ராதிகா ஆப்தே ஆதங்கம்!

SCROLL FOR NEXT