சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் குறைந்திருந்த நிலையில், மாலையில் ரூ.400 உயர்ந்துள்ளது.
நிகழாண்டுக்குள் தங்கம் விலை பவுன் ரூ.1 லட்சத்தைத் தொடும் என்ற நிபுணா்களின் கணிப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலையானது காலை, மாலை என இருமுறை உயா்ந்து வருகிறது.
அந்தவகையில், இன்று சனிக்கிழமை காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ. 250 குறைந்து, ரூ.11,950-க்கும், சவரனுக்கு ரூ. 2,000 குறைந்து ரூ.95,600-க்கும் விற்பனையானது.
ஆனால் மாலையில் தங்கம் விலை கிராமுக்கு 50 உயர்ந்து ரூ. 12 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ. 400 உயர்ந்து ரூ. 96 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 190-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ, 190,000,க்கும் விற்கப்படுகிறது.
தங்கம் விலை அதிகரித்துவருவதால் நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஏனாம்: 30 லட்சத்துக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.