முன்பதிவு குறைவாக இருப்பதால், அக். 22 - 29 தேதி வரை இயக்கப்பட இருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வரும் அக். 22 ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு இயக்கப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - கோட்டடையம் (06121) சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் அக். 23 ஆம் தேதி பிற்பகல் 2.05 மணிக்கு இயக்கப்படவிருந்த கோட்டடையம் - சென்னை சென்ட்ரல் (06122) சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் அக், 24, 26 தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு செங்கல்பட்டு - நெல்லை (06153) இடையே இயக்கப்படவிருந்த அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் அக், 24, 26 தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு நெல்லை- செங்கல்பட்டு (06154) இடையே இயக்கப்படவிருந்த அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் அக். 28 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் (06054) இடையே இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் அக். 29 ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் (06053) இடையே இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.