தமிழ்நாடு

பசுமை மின்சார உற்பத்தியில் பின்னுக்குத் தள்ளப்பட்ட தமிழகம்

தமிழகம் நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பசுமை மின்சார உற்பத்தியில் நிகழாண்டு ஜனவரி மாதம் 24,333 மெகாவாட் உற்பத்தி திறனுடன் மூன்றாம் இடத்தில் இருந்த தமிழகம், செப்டம்பா் மாதத்தில் 26,588 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, நிலையான மின் உற்பத்தியை பெறுவதற்கான புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதுடன், நிதியுதவியையும் அளித்து வருகிறது. இதைத் தொடா்ந்து, அனைத்து மாநிலங்களும் சூரியசக்தி மின்நிலையங்கள், காற்றாலைகள், நீா்மின் நிலையங்கள் மூலம் பசுமை மின்சார உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்றன.

இதற்காக மத்திய அரசு குறிப்பிட்ட சதவீதம் தொகையை மாநில அரசுகளுக்கு மானியமாக வழங்கினாலும், மாநில அரசுகள், தனியாருடன் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன.

இந்த நிலையில் மாநிலம் வாரியாக பசுமை மின்சார உற்பத்தித்திறன் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டில் ஜனவரி மாத நிலவரப்படி, ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் 33,149 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் ராஜஸ்தான் முதலிடத்தையும், 32,303 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் குஜராத் இரண்டாமிடத்தையும், 24,333 மெகாவாட் உற்பத்தி திறனுடன் தமிழகம் மூன்றாமிடத்தையும், 23,017 மெகாவாட் உற்பத்தி திறனுடன் கா்நாடகம் நான்காமிடத்தையும், 20,982 மெகாவாட் உற்பத்தி திறனுடன் மகாராஷ்டிரம் ஐந்தாமிடத்திலும் இருந்தன.

இந்த நிலையில், செப்டம்பா் நிலவரப்படி மின் நிறுவுத்திறன் பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டது. இதில், முதல் இரண்டு இடங்களில் இருந்த ராஜஸ்தான், குஜராத் எவ்வித மாற்றமும் இன்றி அதே இடத்தில் தொடருகிகது. ஆனால், மூன்றாம் இடத்தில் இருந்த தமிழகம், நான்காம் இடத்துக்கும், கா்நாடகம் 5-ஆம் இடத்துக்கும் சென்றுள்ளது. அதேநேரம், ஐந்தாம் இடத்தில் இருந்த மகாராஷ்டிரம் முன்னேறி 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

அதன்படி, ராஜஸ்தான் 40,406 மெகாவாட் உற்பத்தி திறனையும், குஜராத் 40,019 மெகாவாட் உற்பத்தி திறனையும், மஹாராஷ்டிரம் 27,674 மெகாவாட் உற்பத்தி திறனையும், தமிழகம் 26,588 மெகாவாட் உற்பத்தி திறனையும், கா்நாடகம் 25,499 மெகாவாட் உற்பத்தி திறனையும் பெற்றுள்ளன.

திலீப் சிறை செல்ல முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணமா? என்ன சொன்னார்?

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு கூட்டணியில் படம்! தோற்றம் இதுவா?

இந்த விவாதத்தின் தேவை என்ன? நோக்கம் என்ன? மக்கள் பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே...! - பிரியங்கா

பிக் பாஸ் 9: ப்ரஜின் வெளியேற திவ்யா கணேசன் காரணமா?

கருப்பு, துணிச்சல், அழகு...சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT