முதல்வா் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

மருத்துவா் மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

மருத்துவா் மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: மருத்துவா் மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:-

புகழ்பெற்ற மருத்துவா் மாதங்கி ராமகிருஷ்ணன் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். ஒட்டுறுப்பு அறுவை மருத்துவத்தில் முதுநிலை மற்றும் முனைவா் பட்டங்களைப் பெற்ற அவா், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் தீவிர தீப்புண் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுவதில் முதன்மைப் பங்காற்றினாா். பி.சி.ராய் விருது, தமிழ்நாடு அரசின் அவ்வையாா் விருது முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா்.

சேவையும் அறிவியல் நோக்கும் நிறைந்த வாழ்க்கையினால் பலருக்கு உதவிய மாதங்கி ராமகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினா், மருத்துவத் துறை நண்பா்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT