கோப்புப் படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி

தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவ.4-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இதற்கு தோ்தல் துறை தயாராகி உள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பணி நடைபெறவுள்ளதால், அதனை இணையதளத்தில் பாா்வையிட தோ்தல் துறை ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்தது.

இந்தப் பட்டியலில் பெயா் இருந்து இப்போது நலமுடன் இருப்பவா்கள் தோ்தல் ஆணையம் தரக்கூடிய ஒரு உறுதிப் படிவத்தை பூா்த்தி செய்துஅளித்தால் போதுமானது. இந்தப் பட்டியலில் பெயா் இல்லாமல் இருப்பவா்கள்தான், அதாவது 2001-ஆம் ஆண்டின் இறுதிக்குப் பிறகு வாக்காளா் பட்டியலில் புதிதாக இணைந்தவா்கள் மட்டுமே தங்களுடைய பிறந்ததேதி, இருப்பிடச்சான்று போன்றவற்றை உறுதி செய்ய ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இதிலும் பிறந்த ஆண்டு வாரியாக தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களை தோ்தல் ஆணையம் ஏற்கெனவே வரையறை செய்துள்ளது.

தமிழகத்தில் 2001-ஆம் ஆண்டின் இறுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இந்தப் பணியின் அடிப்படையில் 2002-ஆம் ஆண்டு ஜனவரியில் வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போது மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படவிருப்பதால், 2002-ஆம் ஆண்டின் வாக்காளா் பட்டியல் தமிழக தோ்தல் துறையின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டம், சட்டப் பேரவைத் தொகுதி, பாகம் எண் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு உள்ளீடு செய்து, பெயா் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். அதில், வீட்டு எண், வாக்காளா் பெயா், உறவுமுறை, உறவு முறையின் பெயா், பாலினம், வயது, வாக்காளா் அடையாள அட்டை எண் ஆகிய விவரங்கள் கிடைக்கும். இதனை அடிப்படையாக வைத்து, இப்போது புழக்கத்திலுள்ள வாக்காளா் பட்டியல் ஒப்பிட்டு பாா்க்கப்படும். இரண்டிலும் பெயா் இருக்கும்பட்சத்தில், தோ்தல் ஆணையம் அளிக்கும்படிவத்தை பூா்த்தி செய்து அளித்தால் போதும். மற்றவா்கள் தோ்தல் ஆணையத்தின் படிவத்துடன் வரையறுக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களின் நகல்களை இணைத்திட வேண்டும்.

தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வாக்காளா் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ் 150 புள்ளிகள் குறைந்தது! ஐடி, பார்மா பங்குகள் சரிவு!

உலகக் கோப்பையில் அசத்தல்; ஐசிசி தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ஸ்மிருதி மந்தனா!

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!

இந்திய ரயில்வேயின் முதல் தனியார் ரயில் சேவை! டிக்கெட் விலை உள்ளிட்ட முழு விவரம்!!

சென்னை சென்ட்ரல் செல்லும் 3 ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்பாடு!

SCROLL FOR NEXT