தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3,000 குறைந்தது!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்துள்ளது.
வாரத்தின் இரண்டாவது நாளான இன்று(அக். 28) தங்கம் விலை காலையில் குறைந்த நிலையில், மாலையிலும் குறைந்துள்ளது.
கடந்த வாரத்திற்கு முன்னதாக தொடர்ந்து இருமுறை விலை உயர்ந்துவந்த தங்கம் விலை, தீபாவளிக்குப் பின் படிப்படியாகக் குறைந்து வருகின்றது.
Advertisement
Advertisement
அதன்படி, இன்று காலை நிலவரப்படி, தங்கம் ஒரு சவரன் ரூ. 1,200 குறைந்து ரூ. 90,400-க்கும், கிராமுக்கு ரூ. 150 குறைந்து ரூ. 11,300-க்கும் விற்பனையானது. ஆனால் மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.
அதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ. 225 குறைந்து ரூ. 11,075-க்கும், சவரனுக்கு ரூ. 1,800 குறைந்து ரூ. 88,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை காலை நிலவரப்படி ரூ. 5 குறைந்து ரூ. 165-க்கு விற்பனையானது. மாலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.
தங்கம் விலை உச்சத்தைத் தொட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக படிப்படியாகக் குறைந்து வருவது மக்கள் மத்தியில் ஆறுதலை அளித்துள்ளது.
The price of gold jewellery in Chennai has fallen by Rs. 3,000 per sovereign in a single day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.