அடுத்த 2 மணிநேரம் எங்கெல்லாம் மழை தொடரும்?
தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரம் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...
தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மோந்தா புயல், சற்றுநேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று இன்று மாலை ஆந்திரக் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மோந்தா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், ஆந்திரம், ஒடிஸா மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (அக். 28) காலை 10 மணிவரை மிதமான மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Rain will continue for the next 2 hours.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.