அக்டோபர் மாதத்தில் இயல்பைவிடக் கூடுதலாக 36 சதவீதம் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக். 15ல் இந்தியப் பகுதிகளிலிருந்து தென்மேற்குப் பருவமழை விலகியதையடுத்து, ஓரிரு நாள்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. அதன்படி, கடந்த 15 நாள்களில் வங்கக்கடலில் தீவிர புயலாக உருவான மோந்தா புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டது.
இந்த நிலையில், அக்டோபர் மாதம் முழுவதும் இயல்பை விட அதிகளவில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
அக்டோபர் மாதத்தைப் பொருத்தவரை இயல்பைவிடக் கூடுதலாக 36 சதவீத மழை பொழிவு பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் அக்டோபர் 1 முதல் 31 வரை இயல்பாக 171 மி.மீட்டர் மழைப் பதிவாகும். ஆனால், இந்தாண்டு அக். 1 முதல் 31 வரை 233 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க:வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.