ராஜ்பவனில் இருக்கும் பிகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்ய முடியாமல் துன்பப்பட்டு வருகிறார் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பிகார் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது, 'தமிழ்நாட்டில் வேலை செய்யும் உழைக்கும் பிகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர்' என்று பேசியிருந்தார். பிரதமரின் இந்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,
"வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை.
கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையேதான் செய்தனர். ஆனால், கரோனா பெருந்தொற்றின்போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்குத் தெரியும்.
அடுத்த ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று.
தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பிகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்ய முடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்து வருகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவியை மறைமுகமாக
முன்னதாக முதல்வரின் பதிவுக்கு பதிலளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'பிரதமர் மோடி தெளிவாக திமுகவை குறிப்பிடுகிறார், ஆனால் தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முதல்வர் முயற்சிக்கிறார்' எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.