ரயில்! (படம் - தெற்கு ரயில்வே எக்ஸ்)
தமிழ்நாடு

தாம்பரத்திலிருந்து புறப்படும் பாண்டியன், சோழன் உள்பட 5 விரைவு ரயில்கள்! செப்.10 முதல்.!

பாண்டியன், சோழன் உள்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பாண்டியன், சோழன், மலைக்கோட்டை உள்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில், ஐந்து விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் (12654/ 12653) , எழும்பூர் - மதுரை பாண்டியன் (12638), எழும்பூர் - திருச்சி சோழன் (22675), எழும்பூர் - ராமேஸ்வரம் சேது(22661/ 22662), எழும்பூர் - ராமேஸ்வரம்(16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.

அதேபோல, எழும்பூர் - மும்பை விரைவு ரயில், கடற்கரையில் இருந்தும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், வரும் 10 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை இருக்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 express trains including Pandian and Cholan departing from Tambaram! From September 10th!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்?: நயினாா்நாகேந்திரன் கேள்வி

SCROLL FOR NEXT