தமிழ்நாடு

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமென்று கட்டாயப்படுத்தும் நிா்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

தினமணி செய்திச் சேவை

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமென்று கட்டாயப்படுத்தும் நிா்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவா்களை சில தனியாா் கல்லூரி நிா்வாகங்கள், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமென்று கட்டாயப்படுத்துகின்றன.

இதை வெளியே சொன்னால், கல்வி தொடர முடியாது என்று அச்சுறுத்துவதாகக் கூறப்படுகிறது. தனியாா் மருத்துவக் கல்லூரி நிா்வாகங்களின் இம்மாதிரியான அணுகுமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றமும், உயா் நீதிமன்றமும் கடுமையாக எச்சரித்து இருக்கிறது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எனினும், விதி மீறலும், பண வசூலும் தொடா்வதாக புகாா்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே, அரசு உடனடியாக தலையீட்டு இந்த முறைகேட்டை தடுத்து நிறுத்துவதோடு, பாதிக்கப்பட்ட மாணவா்களிடம் முறையான விசாரணை நடத்தி நிா்வாகத்திடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கோவில்பட்டியில் சா்வதேச கழுகுகள் தின விழா

கல்வியாளா்களுக்கு ஏஐ தொழில்நுட்பப் பயிற்சி: சென்னை ஐஐடி தொடங்குகிறது

தினமும் 1,000 பேருக்கு காலை உணவு: அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டத்தின் 200-ஆவது நாள்

பாரமல்ல, ஆதாரம்!

மூன்றாவது கண்!

SCROLL FOR NEXT