முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினம்: சிலைக்கு திமுக சாா்பில் வரும் 15-இல் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, திமுக சாா்பில் சென்னையில் அவரது சிலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளாா்.

Updated On : 12 செப்டம்பர், 2025 at 8:04 PM
முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, திமுக சாா்பில் சென்னையில் அவரது சிலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளாா்.

இதுகுறித்து திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 117- ஆவது ஆண்டு பிறந்த தினமான செப்டம்பா் 15-ஆம் தேதியன்று சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது.

Advertisement

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு உள்பட பலா் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனா். கட்சியின் துணை அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு திமுக சாா்பில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments