அசாம் கிராமம் - பிரதி படம் Center-Center-Villupuram
தமிழ்நாடு

குற்றங்களே நடக்காத கிராமம்! காவல்நிலையத்தை பார்த்ததே இல்லையாம்!!

அசாமில் உள்ள சஹாரியா கிராமத்தில் குற்றங்களே நடக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையதளச் செய்திப் பிரிவு

நகோன்: நாடு முழுவதும் ஒரு நாளில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் பதிவு செய்யப்படுவது ஆயிரக்கணக்கில் இருக்கும் என்றால், பதிவு செய்யப்படாத குற்றங்கள் லட்சக்கணக்கில் இருக்கலாம். ஆனால், ஓரிடம் மட்டும் இதில் கணக்கில் வராது.

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டம், திங் பகுதியில் அமைந்துளள் சஹாரியா கிராமம்தான் அந்த சிறப்பு மிக்க இடம்.

இங்கு கடந்த 30 ஆண்டு காலமாக ஒரு குற்றச் சம்பவமும் நடைபெறவில்லை என்றும், அப்படியே ஏதேனும் வாய்த் தகராறு, வாய்க்கால் தகராறு ஏற்பட்டாலும், அதனை கிராம மக்கள் பேசித் தீர்த்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

கிராமத்தில் காவல்நிலையம் இருக்கிறதா என்று கேட்டால், இருக்கிறதாம். ஆனால், இதுவரை அந்த காவல்நிலையத்தில் ஒரு வழக்குக்கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் தரவுகள் கூறுகின்றன.

திருட்டில்லை, கொள்ளைச் சம்பவங்கள் இல்லை, தாக்குதலோ, போதைப்பொருள் தொடர்பான சம்பவங்களோ இல்லை. ஆனால், அக்கம் பக்கம் கிராமங்களில் இந்த சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த கிராமம் உருவாக்கப்பட்டபோது, வெறும் நான்கு, ஐந்து குடும்பங்கள்தான் இருந்தன. இப்போது 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் இதுவரை காவல்நிலையத்துக்கு ஒரு புகார் சென்றதில்லை என்கிறார்கள் கிராம மக்கள்.

சிறு சிறு தகராறுகள் கூட, கிராமத்தில் உள்ள மூத்தவர்களால் பேசித் தீர்த்து வைக்கப்படும். இங்கு மிக பலமான மத நம்பிக்கைகளும், கலாசார பழக்கங்களும், கல்வியறிவும் இருக்கிறது. இதனை மக்கள் மிகச் சரியாக பின்பற்றி வருவதால், எந்த தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இங்கிருக்கும் மக்கள், திங் பகுதியில் உள்ள காவல்நிலையத்துக்கு ஒரு முறைகூட சென்று பார்த்ததில்லை என்றும், காவலர்களும் இங்கு வந்ததில்லை என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட்: ரூ.12.72 லட்சம் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!

அமுதே தமிழே எனதுயிரே... இளையராஜாவுடன் பாடிய கமல் ஹாசன்!

திமுகவின் அரசுக்கு விஜய்யின் சராமாரி கேள்விகள்! | செய்திகள்: சில வரிகளில் | 13.09.25

TVK வாகனத்தில் MGR படம்! செல்லூர் ராஜூ விமர்சனம்

மணிப்பூரில் பிரதமர் மோடி உரை! | BJP

SCROLL FOR NEXT