காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லம் அமைந்துள்ளது. இன்று(செப். 15) அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு அதி காலையில் அரசின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் முதலாவதாக மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து திமுகவின் சார்பில் கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி, எம்.பி. க. செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார், மாநகர செயலாளர் சிகேவி தமிழ் செல்வன், பகுதி செயலாளர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை அடுத்து திமுகவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து அண்ணாவின் உருவச்சிலை முன்பாக நின்று தமிழகத்தை காப்போம் என்று உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
அதிமுக சார்பில் கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி .சோமசுந்தரம் தலைமையில் அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, நகர் தலைவர் பாலாஜி உள்பட பலரும் அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதையும் படிக்க: தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.